நியமனம்.



சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் மலையக மரபுரிமைகள் அமைச்சின் செயலாளராக திருமதி. டபிள்யூ.ஜே.பீ.எஸ்.வீரக்கோன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவிடமிருந்து, நியமனக் கடிதத்தை, இன்று (01) முற்பகல் அவர் பெற்றுக்கொண்டார்.
திருமதி. டபிள்யூ.ஜே.பீ.எஸ்.வீரக்கோன், இதற்கு முன்னர் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றியிருந்தார்.