கைதிக்கூண்டில் #அக்மீமன தயாரத்ன தேரர் ​



அக்மீமன தயாரத்ன தேரர் ​விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கல்கிசை பகுதியில், மியன்மார் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று குழப்ப நிலையை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பில், அக்மீமன தயாரத்ன தேரர் இன்று விசாரணைக்காக, கொழும்பு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார். 

இதன்படி, காலை 09.45 அளவில் அவர் அங்கு வாக்குமூலம் அளிக்கச் சென்றிருந்தார். 

இந்தநிலையில் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து, கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.