தடம் மாறும் ரயில் நாளை?



நாளை (20) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத சேவையாளர்கள் தீர்மானித்துள்ளனர். 

புகையிரத சாரதிகள், நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக புகையிரத லோகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார். 

கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணங்கிய படி 300 ரூபா சம்பள கொடுப்பனவு இம்மாத சம்பளத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதென்று புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன கூறினார். 

இம்மாத சம்பளம் இருந்ததைவிட குறைவடைந்துள்ளதாகவும், பிரதமரின் செயலாளருடைய உத்தரவு நிறைவேற்றாத காரணத்தாலும் இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்ததாக அவர் மேலும் கூறினார்.