கொக்கட்டிச்சோலையில் சடலம் மீட்பு; சகோதரியின் நண்பன் கைது



வ.துசாந்தன், வா.கிருஸ்ணா, நடராஜன் ஹரன்
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொக்கட்டிச்சோலை, முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வசிக்கும் ஐந்து வயதுப் பிள்ளையின் தாயான 26 வயதுடைய விஜயரட்னம் தர்மினி எனும் பெண்ணே, அவரது வீட்டிலிருந்து நேற்று (09) மாலை சடலமாக மீட்கப்பட்டாரென, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் சகோதரியின் பாடசாலை நண்பரொருவர், அவ்வீட்டில் இருந்தபோதே, மர்மமான முறையில் பெண் உயிரிழந்துள்ளாரென, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, பட்டிப்பளையைச் சேர்ந்த குறித்த இளைஞன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.