ஆலையடிவேம்பு பகுதியில் 8 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு




அம்பாறை ஆலையடிவேம்பு பகுதியில் 8 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது.
தாயின் இழப்பின் பின்னர் பெரியம்மா வீட்டில் குறித்த சிறுமி பராமரிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் தனது சிறிய தந்தையால் குளக்கரைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுதி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் 30 வயதான குறித்த சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.