பொத்துவில் காட்டுக்குள் ஓடி ஒழிந்த மயில்களும், நொண்டிக் குதிரைகளும்...



பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் கண்டு, பொத்துவில் காட்டுக்குள் ஓடி ஒழிந்த மயில்களும், நொண்டிக் குதிரைகளும்...

பொத்துவில் பிரதேச சபையில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (31) நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கலந்துகொண்டனர்.

பல்லாயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பாராளுமன்‌ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள ஏ.எல்.எம். நசீர், என பலரும் கலந்துகொண்டனர்.