களு கங்கையில் கடல் நீர் கலப்பு



நாட்டில் தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக களு கங்கையின் நீர் மட்டம் விரைவாக மாற்றமடைந்திருப்பதால் கடல் நீர் களு கங்கையின் நீருடன் கலந்திருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது. 

இதன் காரணமாக களு கங்கையின் நீர் பல பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அருந்துவதற்கு தகுதியற்றதாக காணப்படுகின்றது என்று நீர் வழங்கல் சபை கூறியுள்ளது. 

எனினும் நாளாந்த ஏனைய தேவைகளுக்கு அந்த நீரை பயன்படுத்த முடியும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

வாத்துவை, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, நாகொட, போம்புவல, பிலிமினாவத்த, பயாகலை, மக்கொன, பேருவளை, அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தர பிரதேச மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்த ​ வேண்டும என்று அந்த சபை கேட்டுக் கொண்டுள்ளது. 

குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு தேவையான குடிநீரை பவுசர் மூலமாக விநியோகம் செய்து பொது இடங்களில் நீர் தாங்கிகள் வைத்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நீர் வழங்கல் சபை கூறியுள்ளது.