அவிசாவளை, தெஹியோவிட்ட பெளத்த ஆரம்ப பாடசாலையை சேர்ந்த ஒன்பது வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹியோவிட்ட பெளத்த ஆரம்ப பாடசாலையில் தரம் 4 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரே நேற்று மைதானத்தில் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வழக்கம் போல் பாடசாலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சிரட்டை வியையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் அருணா ஜயதிலக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவியின் உடலில் வௌிப்புற காயங்கள் எதுவும் இல்லை எனவும் அவரது உடலின் உட்புறத்தில் இரத்தப்போக்கு ஏற்பட்டிக்கக்கூடும் எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment