உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் துப்பாக்கியுடன் வெள்ளை மாளிகை வேலி அருகே வந்த ஒருவர், தன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு. பின் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த துப்பாக்கி சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரியின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை
துப்பாக்கிதாரி தாக்குதல் நடத்திய போது, அவர் பெரும் மக்கள் திரளுக்கு மத்தியில் இருந்ததாக இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட் கூறி உள்ளது.
TWITTER/@FLORIANLUHN/VIA REUTERS
ஃப்ளோரிடாவில் டிரம்ப்
சம்பவம் நடந்த சமயத்தில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லை. அவர் ஃப்ளோரிடாவில் இருந்தார், அவரும், மெலினா டிரம்ப்பும் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலைதான் வாஷிங்டன் வருகிறார்கள்.
GETTY IMAGES
கடந்த சில வருடங்களாக வெள்ளை மாளிகை அருகே இது போன்ற பல பாதுகாப்பு மீறல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அண்மையில், பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று, வெள்ளை மாளிகை அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் ஒரு கார் மோதியது. இந்த சம்பவத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், பெப்பர் ஸ்ப்ரெவுடன் வெள்ளை மாளிகை வேலியை ஏறி குதித்தார் ஓர் இளைஞர்.


Post a Comment
Post a Comment