ஆஃப்கான் தலைநகர் காபுலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 21 பேர் பலியாகி உள்ளனர். ஏ எஃப் பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல செய்தியாளர்களும் இதில் உயிரிழந்துள்ளனர்.
காபுலின் ஷாஷ்தரக் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை, மோட்டார் பைக்கில் சென்ற ஒருவர் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.
முதல் வெடிப்புக்கு 15 நிமிடங்களுக்கு பின்னர், பொதுமக்களும் செய்தியாளர்களும் அங்கு திரண்டபோது இரண்டாவது குண்டு வெடித்தது.
செய்தியாளர்களை இலக்காக வைத்தே இரண்டாவது குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு வைத்திருந்தவர் ஒரு செய்தியாளர் போல வேடமிட்டு, கூட்டத்தில் அதனை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த இரட்டை குண்டு வெடிப்பில் பலர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு எந்த குழுவும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.


Post a Comment
Post a Comment