சுயாதீன ஊடகவியலாளரிடம் விசாரணை



- டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்
சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரிடம் இணையத்தள குற்றவியல் விசாரணைக்குழுவினர் இன்று (11) விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீனமாக கடமையாற்றும் ஊடகவியலாளரிடமே இணையத்தள குற்றவியல் விசாரணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இணையத்தளம் ஒன்றில் இராஜாங்க அமைச்சர் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிடப்பட்டதாக, இராஜாங்க அமைச்சர் இணையளத்தள குற்றவியல் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.