வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தின் மூவர் உயிரிழப்பு



கண்டி ராஜவெல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

37 வயதுடைய தந்தை, 13 வயதுடைய மகள் மற்றும் 05 வயது மகன் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

வீட்டின் அறையில் இந்த தீ பரவியுள்ளதுடன், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மெனிக்ஹின்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.