(அப்துல்சலாம் யாசீம் )
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித கோகொல்லாகமவிற்கும் அமேரிக்காவின் கிறீன் கீ என்ற நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (20) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது அமேரிக்கா நாட்டைச்சேர்ந்த கிறீன் கீ என்ற நிறுவனத்தைச்சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற கழிவுப்பொருற்களை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் அதனூடாக கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது குறித்தும் கலந்துறையாடப்பட்டது.
திருகோணமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அதிகளவில் எங்கு கழிவுப்பொருற்கள் சேகரிக்கப்படுகின்றதோ அப்பகுதியில் ஒரு தொழிற்காலையொன்றை நிறுவவுள்ளதாகவும் அமேரிக்காவின் கிறீன் கீ அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி MICHAEL NATHAN HILL இதன் போது தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்கள் வருவதை தான் விரும்புவதாகவும் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை முன்னேற்றி வருவதுடன் அதிகளவில் வேலை வாய்ப்புக்களை வழங்குவதிலேயே தான் அக்கறையாக உள்ளதாகவும் ஆளுநர் ரோஹித போகொல்லகம இதன் போது தெரிவித்தார்.
இக்கலந்துறையாடலின் போது அமேரிக்காவின் முதலீட்டாளர்கள் மற்றும் கிறீன் கீ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மங்கள செனரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment