அக்கரைப்பற்று பொலிஸ், நீதிமன்ற வளாகமருகில் கொள்ளை





(றிஸ்விஇஸ்மாயில்)
அக்கரைப்பற்று பொத்துவில் வீதி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும், அக்கரைப்பற்று கௌரவ நீதிபதி தங்குமிட சொகுசு வீடு முன்பாக, தொடராக அமையப்பெற்ற கடைத் தொகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சட்டத்தரணி ஏ.ச்.சமீம் அவர்களின் காரியாலயம் சட்டத்தரணி சல்மான் பாஹிம் அவர்களின் காரியாலயம் மற்றும் ரீகல் சலூன்  ஹோட்டல் உட்பட  4 இடங்களில்,  நள்ளிரவு நேரத்தில் கூரைகள் உடைக்கப்பட்டு அறைகளில் இருந்த ஏனைய பொருட்கள் தவிர்ந்து ஒரு தொகை பணம் மட்டும் களவாடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மிகத் தீவிரமாக  மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.