மாவட்ட அனர்த்த முகாமைத்துவக்குழுக்கூட்டம்




(காரைதீவு  நிருபர் சகா)

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவக்குழுக்கூட்டம்  நேற்று(27)
செவ்வாய்க்கிழமை மாவட்ட அரசாங்கஅதிபர் டி.எம்.எல்.திசாநாயக்க தலைமையில்
நடைபெற்றது.

அம்பாறைக் கச்சேரியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபர் கே.விமலநாதன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவஅதிகாரி எம்.சியாட்
மற்றும் நீர்ப்பாசன திணைக்கள உயரதிகாரிகள் கலந்துகொண்டு கருத்துரைத்தனர்.

மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சிமன்றத்தலைவர்கள்
துறைசார்திணைக்களதலைவர்கள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எனப்பலரும்
கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு பிரதேசசெயலக ரீதியாக அனர்த்தமுகாமைத்துவ முன்னெடுப்புத் தொடர்பாக
விரிவாக ஆராயப்பட்டது.
காரைதீவுப் பிரதேசசெயலகப்பிரிவினுள் வெள்ளகாலத்தில் தோணா(கழிமுகம்)
வெட்டப்படுவது குறித்து காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில்
கேள்வியெழுப்பினார்.

ஊர்தாழும்போது நாம் கரையோரபாதுகாப்புதுறை அதிகாரியிடம் அனுமதிகேட்டு
கேட்டுக்கொண்டிருந்தால் ஊர்தாண்டு மக்களும் தாண்டுவிடுவார்கள். சபையில்
பிரேரணை நிறைவேற்றவேண்டுமானாலும் அதேகதிதான் நடக்கும்.

ஊர் நன்மைகருதி நாம் வெட்டப்போனால் கரையோரஅதிகாரி பொலிசிடம் சொல்லி
கைதுசெய்கிறார்கள். ஆனால் இன்று என்னிடமோ பிரதேசசெயலாளரிடமோ
தெரிவிக்காமல் அங்கு ஒப்பந்தவேலை செய்பவர் இந்த தோணாவை வெட்டியுள்ளார்.
ஊர்த்தலைவராகவுள்ள நாம் வெட்முடியாது எனின் சாதாரண ஒப்பந்தவேலை செய்பவர்
வெட்டலாமா? அவருக்கு அந்த அதிகாரம் யார்கொடுத்தது? இது முறையா? சட்டமா?
இது நீதியா? என்று கேட்டார்.

பதிலளித்த அரசாங்கஅதிபர் திசாநாயக்க "தனியே வெட்டாமல்
பிரதேசசெயலாளருக்குத் தெரியப்படுத்திவிட்டு தவிசாளரே தோணாவை
வெட்டமுடியும்.ஏனைய அர்த்தங்களைப்பொறுத்தவரை  ஊர்நன்மைகருதி ஒருகுழுவை
நியமித்து அவர்கள் சம்மதத்துடன் வெட்டலாம் "என்றார்.