உயர் நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் சரியான விளக்கம் இல்லாமல் கருத்து தெரிவிப்பதில் இருந்து விலகி இருக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த தினங்களில் ஊடகங்களிலும் வேறு நிகழ்ச்சிகளிலும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த சில கருத்துக்களின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடயங்களுக்கு உட்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் போது பொறுப்பாகவும் அந்த விடயம் தொடர்பான அறிவுடனும் கருத்து தெரிவிக்குமாறு அவர் வேண்டியுள்ளார்.
விடயம் தொடர்பில் போதுமான அளவு அறிவு இல்லை எனின் அந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை விட்டு விலகி இருக்குமாறும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சி உறுப்பினர்களிடம் வேண்டியுள்ளார்.

Post a Comment
Post a Comment