அக்கரைப்பற்றில்,தவறுதாலான துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட CDF இற்குப் பிணை



#,இர்சாத்.
அக்கரைப்பற்றில் நேற்று துப்பாக்கிப் பிரயோகம் செய்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை அக்கரைப்பற்றுப்  இன்று அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தி, தற்செயலாக தவறுதலாக இச்சம்பவம் நேர்ந்தாகவும், தமக்கு குறித்த சந்தேக நபருக்குப் பிணை வழங்குவதற்கு  எவ்வித ஆட்சேபனையுமில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

வழக்கினை விசாரித்த கௌரவ நீதிபதி பீற்றர் போல், குறித்த பாலமுனையினைச் சேர்ந்த சந்தேக நபரை, ஒரு இலட்சம் ருபா சரீரப்  பிணைியில் செல்ல அனுமதித்தார். இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ருவரி 21ந் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது

இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, அக்கரைப்பற்றுப் போக்குவரத்துப் பொலிஸ்  நேற்றுப் பின்னிரவுக் கடமையில், கல்விக் காரியாலயத்துக்கு முன்பாக ஈடுபட்டிருந்தனர்.மோட்டார் சைக்கிளில் தலைக் கவசமின்றி வந்த இருவரை, நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர்.சைகையை பொருட்படுத்தாதவர்களை சிவில் பாதுகாப்புப் படையினர் துரத்தும் வேளையில்  துப்பாக்கி வேட்டுக்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் கணுக்காலின் கீழ் தீர்க்கப்பட்டுள்ளன என்பதாகத் தெரிவிக்கபடுகின்றது.

இதனால், கடுங்காயமுற்ற இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில், பாதிப்புற்று,வைத்தியசாலையில் வைக்கப்பட்டு்ள்ளவர்களிடம் விசாரித்தபோது, பொலிசாரோ, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரோ தமது வாகனத்தை நிறுத்துமாறு எவ்வித சமிக்ஞையும் வெளிப்படுத்தாததால், தாங்கள் வாகனத்தை செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளனர்.