(க.கிஷாந்தன்)
1000 ரூபா சம்பள உயர்வு கோரி கடந்த பல மாதகாலமாக தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் 1000 ரூபா சம்பள உயர்வுக்கு இணக்கம் தெரிவிக்காத நிலையில் 04.12.2018 அன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென 2015ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையிலேயே இவர்கள் தொடர் போராட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
04.12.2018 அன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கும் வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் 04.12.2018 அன்று மலையகத்தில் பல பகுதிகளில் தோட்ட தொழிற்சாலைககு முன்னால் கூடிய தொழிலாளர்கள் தெரிவித்தனர்
போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டதுடன், டயர்களை கொளுத்தியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது குறித்து இவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கு வீதி வீதியாக இறங்கி போராடவேண்டிய உள்ளதாகவும், இதனை பேசித்தீர்க்க வேண்டிய தொழிற்சங்கங்கள் தங்களிடம் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு தங்களை போராடுவதற்கு வீதியில் இறக்குவதாகவும் அவ்வாறு போராட வேண்டுமென்றால் எதற்காக இவர்களுக்கு சந்தா பணம் செலுத்த வேண்டும் என்றும் மலையகத்திலிருந்து சென்று பாராளுமன்றம் சென்ற அமைச்சர்கள் உறுப்பினர்கள் இதுவரை தங்களுக்கு உரிய நடவடிக்கை பெற்று கொடுக்காது தங்களது பதவிகளை மாத்திரம் காப்பாற்றிக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்வதாவும் இவர்கள் குற்றம் சுமத்தினர்.


Post a Comment
Post a Comment