நேபாளத்தில் கல்வி சுற்றுலா மாணவர்களின் பஸ் விபத்து: 23 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது.

நேபாளத்தில் காத்மாண்டுவில் உள்ள கிருஷ்ணா சென் இச்குக் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பஸ்ஸில் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிய போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மலைப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்த போது பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த 1640 அடி
பள்ளத்தாக்கில் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 23 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் அடங்குவர்.

படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


--- Advertisment ---