வழக்குக்காக அட்மிரல் ரவீந்திர 4 மணிநேரம் பஸ்ஸில் காத்திருந்தார்



முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு சபையின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன இன்று கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் 4 மணிநேரம் சிறைச்சாலை பஸ்ஸில் காத்துக் கிடந்துள்ளார்.
காலை 10.30 மணியளவில் சிறைச்சாலை பஸ் மூலம் கோட்டை நீதவான் வளாகத்துக்கு அழைத்து வரப்பட்ட ரவீந்திரவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை பஸ்ஸிலேயே காத்துக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதற்கமைய பிற்பகல் 2.10 மணியளவில் அட்மிரல் ரவீந்திரவை சிறைச்சாலை அதிகாரிகள்  நீதிமன்றுக்குள் அழைத்துச் சென்றதுடன், தற்போது ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அவரை கடும் எச்சரிக்கையுடன் நீதவான் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து கடந்த நவம்பர் 28ம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரான அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்