புதிய கடற்படை தளபதி நியமிப்பு

ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா இலங்கை கடற்படையின் புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதியின் செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (31) காலை இதற்கான நியமனக் கடிதத்தை ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா பெற்றுக்கொண்டுள்ளார். 

இதன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து, ரியர் அட்மிரல் கே.ரி.பி.எச். டி சில்வா இலங்கை கடற்படையின் 23 வது தளபதியாக செயற்படுவார். 

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். சேனவிரட்ன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


--- Advertisment ---