நெல்சன்:
இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்திலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நெல்சன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மலிங்கா நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 131 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 134 ரன்கள் அடித்தார். மேலும் ஹென்றி நிகோலஸ் அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 80 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 124 ரன்கள் குவித்தார். கேப்டன் வில்லியம்சன் 55 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் கேப்டன் மலிங்கா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
365 என்ற கடினமான இலக்கை நோக்கி இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு தனஞ்ஜெயா டிசில்வா மற்றும் டிக்வெல்லா ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 8-வது ஓவரில் சவுதி வீசிய பந்தில் தனஞ்ஜெயா டிசில்வா ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழ இலங்கை அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 117 ரன்கள் எடுத்து தடுமாறியது. 2-வது ஒருநாள் போட்டியை போலவே இந்த போட்டியிலும் திசாரா பெரேரா அதிரடியாக விளையாடி 63 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பெரேராவின் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியதால் இலங்கை அணி 41.4 ஓவர்களில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. இதில் இலங்கை அணி கடைசி 5 ரன்களை எடுப்பதற்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஃபெர்குசன் 4 விக்கெட்களையும், இஷ் சோதி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக 134 ரன்கள் குவித்த ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment