முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று (09) காலை 11 மணியளவில் உலங்குவானூர்தி மூலம் முல்லைத்தீவுக்கு வருகைதந்த அவரை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வரவேற்றார்.
தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
அவருடைய அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான பாதிப்புக்கள் தொடர்பில் இதன்போது கேட்டறிந்து கொண்டு அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி பயனாளிகளுக்கான வாழ்வாதரம் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் அமைச்சின் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)

Post a Comment
Post a Comment