அக்கரைப்பற்று ஆலையடிவேம்பை பிறப்பிடமாகக் கொண்டவர் அழகையா. கடந்த 48 வருடங்களாக அக்கரைப்பற்று முஸ்லிம் பிரேதேசத்தில் சலவைத் தொழில் செய்து வருகின்றார். அழகையா சலவைத் தொழில் பொன் விழாக் காண இருப்பதோ இன்னும் 2 வருடங்கள்தான்.
அழைகையாவின் ஒரு புதல்வி சட்டத்தரணி என்பது குறிப்பிடத் தக்கது.
#என்ன #ஆச்சரியம்!
அண்மையில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் என்னிடம் வந்து அழகையாவைப் பற்றிய ஒரு சம்பவம் என தொடங்கினார்
நீங்கள் அண்மையில் அவரைப்பற்றி பற்றி முக நூலில் பதிவிட்டிருந்தீர்கள் அதனால் உங்களிடம் சொல்கிறேன் என தொடர்ந்தார்
கடந்த வெள்ளிக்கிழமை சில சேட் டுகளை ஐயன் பண்ணுவதற்காக அழகையாவிடம் கொடுத்து விட்டு வந்திருக்கின்றார்
வீட்டுக்கு வந்த போது நினைவுக்கு வந்திருக்கின்றது ஒரு சேட் பையினுள் ரூபாய் 60,000/= வைத்தது
உடனே பதற்றத்துடன் அழகையாவிடம் சென்றிருக்கின்றார்
என்ன ஆச்சரியம்
அறுபது ஆயிரம் ரூபாய் பணத்தை
இருவர் முன்னிலையில் எண்ணி பத்திரமாக வைத்திருப்பதை கண்டு வியப்படைத்திருக்கின்றார்
குறித்த நபர்
இவரின் உண்மைத் தன்மைக்கும், நேர்மைக்கும் இதுவே சாட்சி
இவர் அணியும் வெள்ளை ஆடை
போல் துமைய்யானது இவரின் உள்ளமும்
#ஐயா
#அழகையா
என்றும் வாழ்க #நலமுடன்.. ...


Post a Comment
Post a Comment