ரத்கம வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்டுள்ளது





ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த இரண்டு வர்த்தகர்களும் கொலை செய்யப்பட்டு, பின்னர் வலஸ்முல்ல, மெதகங்கொட பிரதேச வனப்பகுதியில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் கூறியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.