ஐபிஎல் தொடரின் 2-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு புவனேஸ்வர் குமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இருவரும் பொறுப்புடன் ஆடி 100 ரன்களை சேர்த்தனர்.
அணியின் எண்ணிக்கை 118 ஆக இருந்த போது பேர்ஸ்டோ 39 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விஜய் சங்கர் நிதானமாக ஆடினார்.
அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 53 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரி விளாசி 85 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய யூசுப் பதான் ஒரு ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் சங்கர் 40 ரன்களுடனும், மணிஷ் பாண்டே 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். #IPL2019 #KKRvSRH


Post a Comment
Post a Comment