செயலமர்வு


( அப்துல்சலாம் யாசீம்)

இலங்கையில் அனைத்து மதங்களுக்கிடையிலும், சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமைக்கான ஒரு பொது நோக்கை ஊக்குவிக்கும் செயற்திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் திருகோணமலையில் நடைபெற்றது.

திருகோணமலை-எகெட் கரித்தாஸ் கேட்போர் கூடத்தில் இன்று (30) திட்ட இணைப்பாளர் எம். ஏ. எம். றிஸ்மி தலைமையில் இடம்பெற்றது. 

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சமயத்தலைவர்கள் மத்தியில் நட்புறவை மேம்படுத்தும் திட்டம், சிறுவர் பாதுகாப்பு, கண்ணிவெடிகள் பற்றிய விழிப்புணர்வுகள், வறிய குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம், மாணவர்களின் கல்விக்கு உதவுதல், பாதுகாப்பான வெளிநாட்டு பயணம், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த பின்னரான வாழ்வாதார உதவிகள் என பல திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் திட்ட இணைப்பாளர் இதன்போது தெரிவித்தார். 


அத்துடன் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், அரசாங்க திணைக்களங்களின் தரவுகளை பெற்று சேவையாற்றி வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.


இந்நிகழ்வில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின்  முகாமையாளர் ஜீ. ஏ. பிரான்சிஸ், ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.