(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ, கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலைகளின் குறைபாடுகளை கண்டறிந்து அவ்வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடல் இன்று (26) மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பீ. கயல்விழி தலைமையில் இடம்பெற்றது.
மொரவெவ ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை, கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை அவ்வைத்தியசாலைகளுக்கு சென்று பார்வையிட்டனர்.
இதேவேளை எதிர்காலத்தில் நோயாளர்களின் நலன்கருதி குறைகள் காணப்படுகின்ற வைத்தியசாலைகளை இணங்கண்டு அவ்வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்வதுடன், தயமுயர்த்துவது பற்றியும் கலந்துறையாடப்பட்டது.
அத்துடன் பிரதேசத்தில் காணப்படுகின்ற சிறுநீரக நோயாளர்களுக்கு இலவச சேவைகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றியும், ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பீ. கயல்விழி, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் திட்டமிடல் பொறுப்பதிகாரி டொக்டர் சபீக்கா முனாஸ் மற்றும் பிரதேச வைத்திசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment