''ராதாரவி குடும்ப பெண்கள் மீது பச்சாதாபப்படுகிறேன். ராதாரவி மாதிரியான ஆட்களும் ஓர் தாய்க்கு பிறந்தவர்கள் தானே'' என ராதாரவியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பின் நயன்தாரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம் என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார்.
அவரது சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அவரது இந்தப் பேச்சை கீழே அமர்ந்திருப்பவர்கள் கைதட்டி ரசிக்கும் சத்தமும் இந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. ராதாரவியின் பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது.
நயன்தாரா குறித்த அவதூறு பேச்சு: ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்
மோதி, ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி
இன்று காலை தி.மு.கவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகர் ராதாரவி தங்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டுவருவதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ராதாரவியின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக நயன்தாரா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் ராதாரவிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @DoneChannel1
View image on TwitterView image on Twitter
Done Channel
@DoneChannel1
Actress #Nayanthara Press statement regarding the recent issue.
1,355
பிற்பகல் 2:54 - 25 மார்., 2019
இதைப் பற்றி 403 பேர் பேசுகிறார்கள்
Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @DoneChannel1
''நான் பொதுவாக அரிதாகவே அறிக்கை விடுவேன். நான் எப்போதும் என்னுடைய தொழில்முறை ரீதியிலான வேலை மூலமாக பேசுவது வழக்கம். ஆனால் இன்று என்னுடைய நிலைப்பாட்டை விரிவாக விளக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறேன்.
முதலில் ராதாரவியின் பெண் வெறுப்பு பேச்சுக்கு எதிராக துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ராதாரவி மற்றும் அவரை போன்ற பெண் வெறுப்பாளர்களும் ஒரு தாய்க்கு பிறந்தவர்கள்தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். பெண்களை தாழ்த்தி பேசுவதன் வழியாகவும், அவர்களை ஆபாச பொருளாக விவரிப்பதன் மூலமாகவும் இம்மாதிரியானவர்கள் ''ஆண் பெருமை'' உணர்வை பெறுகின்றனர்.
இதுபோன்ற ''வலுவான ஆண் பெருமை'' கொண்டவர்களின் குடும்பங்களில் வாழும் பெண்களுக்கு எனது பச்சாதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.
ஒரு மூத்த நடிகராக ராதாரவி இளம் தலைமுறைக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் ஆண் பெருமை பேசுபவர்களுக்கு உதாரணமாக உள்ளார்.
ராதாரவி மாதிரியான ஆட்கள் தொழிலில் வீழ்ச்சியை சந்தித்த பிறகு இது போன்ற மலிவான உத்திகளை கையாண்டு வெளிச்சம் பெற முயல்கிறார்கள்.
உண்மையில் இன்னமும் அதிர்ச்சியாக இருக்கும் ஒரு விஷயம் என்னவெனில் ராதாரவியின் ஆணாதிக்க பேச்சுக்கு அங்கிருந்த கூட்டத்தில் சிலர் சிரித்து கைதட்டியிருக்கின்றனர்.
ரசிகர்கள் இதுபோன்று பெண்ணை போகப்பொருளாக சித்தரிக்கும் பேச்சுகளுக்கு ஆதரவு கொடுக்கும் வரை ராதாரவி மாதிரியானவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் விதமான நகைச்சுவைகளை மேடையில் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்.
ராதாரவியின் இது போன்ற நடத்தைகளை எனது அன்புக்குரிய ரசிகர்களும் நல்ல எண்ணம் கொண்ட பொதுமக்களும் நிராகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ராதாரவியின் பெண்களுக்கு எதிரான பேச்சுக்கும், குறிப்பாக என்னை குறித்து பொதுவில் பேசிய விஷயத்திற்கும் இந்த அறிக்கையின் வாயிலாக வலுவான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
ராதா ரவி
கடவுளின் அருளால் எனக்கு தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களும், பாசமான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள். இது போன்ற எதிர்மறை விஷயங்களுக்கு இடையில் நான் தொடர்ந்து சீதா, பேய், கடவுள், தோழி, காதலி, மனைவி என எந்தவொரு கதாபாத்திரத்திலும் நடிப்பேன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடைசியாக என்னுடைய ஒரு பணிவான கேள்வியை கேட்டுக்கொள்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி விசாகா வழிகாட்டுதலோடு உள் விசாரணை கமிட்டியை அமைப்பீர்களா?'' என அந்த அறிக்கையில் தனது கேள்வியை பதிவு செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா

Post a Comment
Post a Comment