களு கங்கையில் கடல் நீர் கலப்பு; பருகுவதற்கு உகந்த நிலையில் இல்லை

களு கங்கையில் கடல் நீர் கலந்துள்ளதால் அதனை அண்டி பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் பருகுவதற்கு உகந்த நிலையில் இல்லை என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது. 

உப்பு கலந்துள்ள அந்த நீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துமாறு அந்த சபையின் தலைவர் கே.எச். அன்சார் கூறியுள்ளார். 

அந்தப் பிரதேசங்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக பவுசர் ஊடாக நீர் விநியோகிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். 

24 மணித்தியாலமும் நீர்க் கலப்பில் எற்படுகின்ற மாற்றம் தொடர்பில் கண்காணித்துக் கொண்டிருப்பதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.எச். அன்சார் கூறியுள்ளார்.


--- Advertisment ---