நாட்டைச் சீர்குலைக்க ஞானசார தேரர் திட்டம்! – 7ஆம் திகதிப் போராட்டத்தைத் தடுத்துநிறுத்துமாறு அப்துல்லா மஹ்ரூப் எம்.பி. வலியுறுத்து

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நாட்டைச் சீர்குலைக்கும் விதமாகப் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை இராஜிநாமா செய்திருக்காவிட்டால் பெரும் இனக்கலவரம் நாட்டில் ஏற்பட்டிருக்கும். நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சுமே சிந்தித்துச் செயலாற்றவேண்டும்.
அந்தவகையில் எதிர்வரும் 7ஆம் திகதி ஞானசார தேரர் நடத்தத் தீர்மானித்துள்ள பாரிய போராட்டத்தை நிறுத்தத் தவறினால் தனியொருவர் நாட்டின் சட்டத்தைக் கையிலெடுக்கும் செயற்பாடாக அது அமையும். ஆகையால் அதனை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்துவது அவசியமாகும்.
நாட்டின் சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது” – என்றார்.


--- Advertisment ---