முச்சக்கரவண்டி விபத்தில்

(க.கிஷாந்தன்)

நாவலப்பிட்டியில் 02.07.2019 அன்று இடம்பெற்ற விபத்தில் 09 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ஹப்புகஸ்தலாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புகஸ்தலாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் முதலாம் மற்றும் 03ம் வகுப்புகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் 08 பேர் இந்த முக்கச்சர வண்டியில் பயணம் செய்த வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த முச்சக்கர வண்டி வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உட்பட 09 பேரும் நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, இதில் ஒரு மாணவன் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


--- Advertisment ---