A/L அனுமதிப் பத்திரம் இணையத்தளத்தில்


க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் பரீட்சை அனுமதிச் சீட்டை இணையத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. 

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் சகல பரீட்சார்த்திகளுக்குமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுவிட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 

பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் அவர்களின் விலாசத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

இன்று முதல் தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் பரீட்சை அனுமதிச் பத்திரம் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் அதனூடாகவும் தங்களது அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இம்முறை க.பொ.த உயர் தரப் பரீட்சை புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைய இடம்பெற உள்ளதாகவும் அதற்காக 337,704 மாணவர்கள் தேற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இம்முறை உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.