துடுப்பாட்டத்தை இடைநிறுத்தியது, நியூஸிலாந்து

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுகின்றது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 109 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 65 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பந்துவீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் திம் சௌத்தி 4 விக்கெட்டுக்களையும் பேல்ட் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர். 

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுக்களையும் இழந்து 431 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் போட்டியை இடைநிறுத்தியுள்ளது. 

இதன்படி நியூசிலாந்து அணி இலங்கை அணியை விட 183 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கின்றது. 

துடுப்பெடுத்தாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் லத்தம் 154 ஓட்டங்களையும் வெட்லின் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களையும் கிரான்ஹேம் 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். 

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் தில்ரவன் பெரோரா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


--- Advertisment ---