சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தவர், கைது

பாறுக் ஷிஹான்

சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக 119 அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை(27) இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இவ்வாறு சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதேச முகாமையாளராக கடமையாற்றி வருபவராவார்.


Advertisement