அபிவிருத்தி அதிகாரிகள், பணிபகிஷ்கரிப்புக்கு தயாராகின்றனர்


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட அபிவிருத்தி அலுவலர்கள் சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் பணி புரியும் சுமார் 16 ஆயிரம் அபிவிருத்தி அதிகாரிகளில் தொழில்முறை பிரச்சினைகளுக்காக அரசாங்கத்தினால் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிராக எதிர்வரும் தினத்தில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கம்பெரலிய திட்டத்தினை செயற்படுத்துவதற்கான கொடுப்பனவுகள் பெற்றுக் கொடுக்கப்படாமை, கிராம சக்தி வேலைத்திட்டத்தினை செயற்படுத்தியமைக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்படாமை, மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை, போக்குவரத்து கொடுப்பனவுகள் வழங்கப்படாமை ஆகிய விடயங்கள் சிலவற்றை முன்வைத்து இந்த பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் திகதி நாளை அறிவிக்கப்படும் என அபிவிருத்தி அலுவலர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது