ரொபட் முகாபே காலமானார்


சிம்பாப்வேயின் நீண்ட கால குடியரசுத் தலைவர் ரொபட் முகாபே காலமாகியுள்ளார்.
அவர் தனது 95 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராபர்ட் கேப்ரியல் முகாபே (Robert Gabriel Mugabe, பிறப்பு: பெப்ரவரி 2119241980 முதல் இன்று வரை சிம்பாப்வே நாட்டின் தலைவராக உள்ளார். 1980 முதல் 1987 வரை பிரதமராக பதவி வகித்தார். 1987 முதல் குடியரசுத் தலைவராக பதவியிலுள்ளார். 1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட வீரராக இருந்த முகாபே சிம்பாப்வே விடுதலை பெற்று ஆப்பிரிக்க மக்கள் இவரை நாயகராகப் போற்றினர்.
1998 முதல் பல்வேறு நாடுகள் இவரைக் குற்றம் சாட்டியுள்ளனர். இவரின் பொருளாதாரக் கொள்கைகளும், இரண்டாம் கொங்கோ போரில் செலவான குறுக்கிடலும் சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயின.[1] 2008இல் இவரின் அரசியல் கட்சி, சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம், முதல் தடவை தேர்தலில் மக்களாட்சி மாற்றல் இயக்கம் என்ற எதிர்க் கட்சியிடம் தோற்றது.

ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக

ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக ராபர்ட் முகாபே 30.1.2015 பொறுப்பேற்றார்.
எத்தியோப்பியத் தலைநகர் ஆடிஸ் ஆபபாவில் நடைபெறும் ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில், முன்னாள் தலைவர் ஏபல் அஜீஸிடமிருந்து இந்தப் பொறுப்பை அவர் பெற்றார்.[2]