தீப்பரவல்

(க.கிஷாந்தன்)
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி கெட்டபுலா புதுகாடு தோட்ட பகுதியில் உள்ள லயன் குடியிருப்பு ஒன்றில் 07.09.2019 அன்று தீப்பரவல் இடம் பெற்றுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லயன் குடியிருப்பில் பத்து குடியிருப்புகளை கொண்ட லயன் குடியிருப்பில் ஒரு குடியிருப்பு மாத்திரம் முற்றாக எறிந்து சாம்பலாகியுள்ளதோடு, ஏனைய ஒன்பது குடியிருப்புகளுக்கும், தீ பரவாமல் பொதுமக்கள் இணைந்து தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குடியிருப்பில் மாத்திரம் இருந்த உபகரணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியதோடு மின்சார கோளாறு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.


Advertisement