நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும்


பாறுக் ஷிஹான் 
 
தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள  பல்வேறு  நெருக்கடியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே  நாட்டை மீட்டெடுக்க முடியும் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள  கல்முனை சுபத்திரா ராமய விகாரைக்கு சனிக்கிழமை(31) மாலை விஜயம் செய்து  ரன்முத்துகல  சங்க ரத்ன தேரர்   விகாராதிபதியை சந்தித்து ஆசிபெற்ற பின்னர்   கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

நாட்டின் எல்லா பகுதிகளிலும் இன்று பொருளாதாரம் நல்லிணக்கம் தொடர்பிலான  நெருக்கடி நிலை உணரப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து நாட்டினை பாதுகாக்க பொறிமுறை ஒன்றினை    கட்டியெழுப்ப என்னால்  முடியும்
 என்பதுடன்  முன்னைய அரசாங்க காலத்திலும் அதற்கான  சவால்கள் காணப்பட்டதாகவும் எனினும் இன்று அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள இந்த அரசாங்கம் திணருகின்றது.எனவே இச்சவாலை வெற்றிக்கொண்டு முன்நோக்கி எதிர்காலத்தில் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக பதவிவகிக்க விருப்பம் இல்லை எனவும் ஆனால் நாட்டை நிர்வகிக்க தான் விரும்புவதாகவும் அவர் கூறினார்.அது அரசியல் ரீதியாகவா அல்லது உத்தியோகத்தராக என காலம் முடிவு செய்யும் .நாட்டை மீண்டும் கட்யெழுப்ப தானும் துணை நிற்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயத்தின் போது விகாரை வளாகத்தில் மாமரம் ஒன்றினை நட்டதுடன் விகாரைக்கு தேவையான பௌதீக வளங்கள் அதன் தேவைப்பாடுகள் குறித்தும் விகாராதிபதியிடம் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தககது.