முன்னாள் நீதவான் ஒருவரது, விளக்கமறியல் நீட்டிப்பு



 


களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதவான் திரு.RPJ  ரஞ்சித் குமார் அவர்களை, மே மாதம் 10ம் திகதி வரை (விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி கெளரவ நீதவான் திரு. பிரதீபன் கட்டளையிட்டார். வீடியோ இணைப்பின் மூலமாக சந்தேக நபர் இணைக்கப் பட்டிருந்தார்.


(முந்தைய செய்தி)
இவருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி  பொலிசார்,  வழக்குப் பொருட்களான ரூபா 408333.07  பெறுமதியான பொதுச் சொத்துக்களான மரத்தளபாடங்களை  கையாடல் செய்த வழக்கில் சந்தேக நபராக உட்படுத்தி,  களுவாஞ்சிக்குடி  நீதிமன்றத்தில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்திருந்தனர்.

இதேவேளையில், இதே நீதிமன்றில் பதில் பதிவாளராகப் பணியாற்றி வந்த திரு.ரமேஸ் என்பவர் சுமார் 18 மில்லியன் பெறுமதியான (தங்க நகைகளை) சான்றுப் பொருளைக் கையாடல் செய்த குற்றத்திற்காக, விளக்க மறியலில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் பணிப்பின் பேரில், களுவாஞ்சிக்குடியில் ்இட்ம்பெற்ற மோசடிகள் தொடர்பாக, நீதிமன்றில் பணிபுரியும்  அதிகாரிகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி திரு. பிரபாகரன் அவர்களினால்,விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்கள்.

நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு நீதிபதிகள் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில்  விசாரணைகளை அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.

களுவாஞ்சிக்குடி முன்னாள் நீதிபதியாகவிருந்த திரு.ரஞ்சித்துமார் 2026 முதல் சம்மாந்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

நீதிச்சேவை ஆணைக்குழு. 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில், ஒழுக்காற்று விசாரணைகளின் பின்பு இவரை இடைநிறுத்தியுமிருந்தது.

களுவாஞ்சிக்குடி பொலிசார், களுவாஞ்சிக்குடியில் காணமல் போயிருந்த  1.5 மில்லியன் பெறுமதியான மரக்குற்றிகள் தொடர்பில் சந்தேக நபராக திரு.ரஞ்சித் குமாரைப் பெயரிட்டிருந்தனர்.

இன்றைய தினம், நகர்வு மனு ஒன்றினை சிரேஸ்ட சட்டத்தரணி மனார்தீன் மூலமாக, திரு.ரஞ்சித் குமார் ஆஜராகியிருந்தார். சிரேஸ்ட சட்டத்தரணிகளான பாறுாக், முபீத். இஹ்லாஸ்,மற்றும் இயாஸ்தீன் சுஜிதாஸ் தனுசியா, பசீல், கிருபாகரண், ஆகியோர் சந்தேக நபரான ரஞ்சித்குமார் ஆகியோர் சார்பில் ஆஜராகினர்.

சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களின் பின்பு, ரஞ்சித் குமார் அவர்களை, மே மாதம் 4ம் திகதி வரை (இன்றிலிருந்து 14 நாட்களுக்கு), விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி கெளரவ நீதவான் திரு. பிரதீபன் கட்டளையிட்டார்.