ஐ.தே.கவின் நேரடி ஒளிபரப்பை அதிரடியாக நிறுத்தியது தேர்தல்கள் ஆணைக்குழு

ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனத்தின் நேரடி ஒளிபரப்பு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் உத்தரவிற்கு அமைய, ரூபவாஹிணியில் ஒளிபரப்பான நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ரூபவாஹிணி கூட்டுதாபனத்திற்கு விஜயம் மேற்கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், சம்மேளனத்தின் நேரடி ஒளிபரப்பிற்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதா என வினவியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி கட்டணம் செலுத்தாமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சம்மேளனத்தின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது


--- Advertisment ---