சிறுவர் தின நிகழ்வு,மாளிக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில்

மாளிக்காடு அல் ஹுசைன்  வித்தியாலயத்தில்  சிறுவர் தின நிகழ்வு   செவ்வாய்க்கிழமை( 1)  அதிபர் ஏ.எல்.எம்.ஏ நளீர் தலைமையில்  இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக  பொத்துவில் லகுகல தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் (NARA) நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமாகி நிபுன ஷொய்ஷா   ,விஷேட அதிதியாக காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.ம்.ஜாஹீர்   காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஜெ.டேவிட்  ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வின்  போது கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களும் , விசேட அதீதிகளும் கெளரவிக்கப்பட்டனர்.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹிர் கருத்து தெரிவிக்கையில் கடந்த மாதம் கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தன்னை பெரிதும் பாதித்ததாகவும், மன வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.


--- Advertisment ---