கைது

(க.கிஷாந்தன்)

பதுளை, கந்தேகெதர பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை பதுளை கலால் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

குறித்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் பதுளை, கந்தேகெதர எனும் பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வருவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த கலால் திணக்கள அதிகாரிகள் 15.04.2020 அன்று நிலையத்தினை சுற்றிவளைத்த போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்த்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 330 லீற்றர் கோடா, மற்றும் ஸ்பீரிட் கசிப்பு உட்பட கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியன கலால் திணைக்கள அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரையும், மற்றும் மீட்கப்பட்ட பொருட்கள் ஆகியனவற்றையும் பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.


Advertisement