15,000 கோடி வரை இழப்பை சந்திக்கும் இந்திய பத்திரிகைத்துறை



கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு உத்தரவால், பத்திரிகைத் துறை கடும் சவால்களை சந்தித்து வருகிறது. பத்திரிகைத் துறை 15 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்திக்கும் என இந்திய பத்திரிகை சங்கம் தெரிவித்துள்ளது.  
கொரோனாவின் தாக்கம் 15,000 கோடி வரை இழப்பை சந்திக்கும் இந்திய பத்திரிகைத்துறைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
மேலும் ஊரடங்கு உத்தரவால் விளம்பரங்கள் இன்றி பத்திரிகைகள் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இந்திய பத்திரிகை சங்க தலைவர் சைலேஷ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பத்திரிகை விற்பனையிலும் வருவாய் இழப்பை சந்தித்து வருவதால் இந்த துறையில் பணியாற்றும் 30 லட்சம் பணியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் 15,000 கோடி வரை இழப்பை சந்திக்கும் இந்திய பத்திரிகைத்துறைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 4000 கோடி முதல் 4500 கோடி வரை வருவாய் இழப்பே சந்தித்ததாக பத்திரிக்கை துறை குறிப்பிடுகிறது. மேலும் அடுத்த 6 அல்லது 7 மாதங்களுக்கு தனியார் நிறுவனங்கள் விளம்பரம் அளிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.


பத்திரிக்கை துறை இந்த இழப்பீடை சந்திக்க மத்திய அரசு நிவாரண திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.