கொவிட் 19 நிவாரண பணி

பாறுக் ஷிஹான்

காரைதீவு அபிவிருத்தி மற்றும்  திட்டமிடல் சமூகமானது  முருகண்டி நேசக்கரங்கள் கனடா அமைப்புடன் இணைந்து கொவிட் 19   நிவாரண பணியினை அம்பாறை மாவட்ட வீரச்சோலை கிராமத்தில் இரண்டாம் கட்டமாக முன்னெடுத்துள்ளது

இக்கிராமத்தில் வசிக்கின்ற 194 குடும்பங்களில் இரண்டாம் கட்டமாக செவ்வாய்க்கிழமை(26) காலை 123 குடும்பங்களுக்கான சுமார் 1500 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன

மேற்படி உலர் உணவு பொதியில் மரக்கறி உள்ளடங்கலாக அரிசி சீனி உப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது அத்துடன்  மரக்கறிகள் யாவும் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மணல்சேனை   கிராமத்தில் கடந்த ஊரடங்கு சட்ட அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அறுவடை செய்யப்பட்டு சந்தைப் சந்தைப்படுத்த முடியாத மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ் ரங்கநாதன் காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்தின் தலைவர் பொறியியலாளர் ராஜமோகன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர் .

இதற்கான ஏற்பாடுகளை இப்பிரதேசத்தின் கிராமசேவகர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் மேற்கொண்டிருந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


Advertisement