கோழித் திருடன் கைது

பாறுக் ஷிஹான்கோழிப்பண்ணை ஒன்றில் ஒரு மாதகாலமாக   கோழிகளை திருடி வந்த சகோதரர்களை  சம்மாந்துறை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை ஹயர் பள்ளி பகுதியில்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கோழிப்பண்ணையில் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாக  முறைப்பாடும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின்  வழிநடத்தலில்    சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா   தலைமையில் பொலிஸ் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக செவ்வாய்க்கிழமை(26) வீரமுனை பகுதியை சேர்ந்த சுமார் 15 மற்றும் 18 வயதினை உடைய சகோதர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைதான இருவரினால் களவாடப்பட்ட கோழிகள் சிலவற்றை விற்பனை செய்த நபர்களிடம் அடையாளம் காட்டியதற்கமைய மீட்கப்பட்டுள்ளன.

மேலும் ரூபா 15 ஆயிரம் பெறுமதியான கோழிகள் இவர்களால்  களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ்  விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
Advertisement