தொழுகை நடத்த அனுமதி, தேவாலயத்தில்

ஜெர்மனியில் மே 4-ம் தேதி முதல் மத வழிபாடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு வரும் நிலையில், பெர்லினில் உள்ள தார் அஸ்லாம் மசூதியில் இட நெருக்கடியால் முஸ்லிம்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை.

இதனால்,அங்குள்ள மார்தா லூதேரன் கிருஸ்துவ தேவாலயத்தில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Advertisement