ஆறுமுகன் தொண்டமான் காலமானார்


(G.K.Kisaanthan)


திடீர் சுகயீனம் காரணமாக தலங்கம வைத்தியசாலையில் இன்று இரவு அனுமதிக்கப்பட்ட அவர் காலமானார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பலம்பெறும் அரசியல்வாதி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.


அவர் தனது 55 வது வயதில் காலமாகி உள்ளார்.


அவசர சுகயீனம் காரணமாக கொழும்பு - தலங்கம வைத்தியசாலையில் இன்று இரவு அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு காலமாகி உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கிறது.




சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் அல்லது ஆறுமுகன் தொண்டமான் (Savumiamoorthy Arumugan Ramanathan Thondaman, பிறப்பு: 29 மே 1964) கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் அமைச்சரும் தொழிற்சங்கவாதியுமான சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆவார்.[1] இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட உறுப்பினரும் ஆவார்,

ஆறுமுகன் தொண்டமான், 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார்.

ஆறுமுகன் தொண்டமான் 1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.


மாரடைப்பு காரணமாகவே முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.