வெறிச்சோடியது,பெருநாள்


பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்ட  முஸ்லீம் மக்கள்  இம்முறை   றமழான் நோன்பு பெருநாளை    எளிமையான முறையில் கொண்டாடிவருகின்றனர்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (24)  இம்  மாவட்டத்தில் உள்ள  பள்ளிவாசல்களில் பெருநாளிற்கான தக்பீர் சொல்லப்பட்ட நிலையில் தத்தமது வீடுகளில் இருந்து அனைத்து முஸ்லீம் மக்களும்  மிக எளிமையான முறையில் றம்ழான் பண்டிகை  தொழுகையினை முன்னெடுத்திருந்தனர்.

கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் காரணமாக அரசாங்கம் விடுத்திருந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய  வீடுகளின் இருந்து தொழுகையினை  நிறைவேற்றியதுடன் நிபந்தனைக்கு அமைய விசேடமாக ஒலிபெருக்கி மூலமாக குரான் ஒதும் முறையும் இங்கு ஒழுங்கமைப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலதிகமாக அயல் வீட்டுகளில் பெருநாள் தொகுகையின் பின்னர் தத்தமது உபசரிப்பு முறையினை ஈடுப்பட்டு வருவதை காண முடிந்தது.

குறிப்பாக   கல்முனை பொலிஸ் பிராந்தியத்தில்   நோன்புப்பெருநாள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கல்முனை ,சாய்ந்தமருது, மருதமுனை, மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இன்றைய ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையில்  அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் வழிகாட்டலுக்கு அமைவாக  மிகவும் அமைதியான முறையில் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும்  நோன்புப்பெருநாள்  வழமை போன்று  இம்முறை பள்ளிவாயல்களிலோ திறந்த வெளிகளிலோ அல்லது மைதானங்களிலோ தொழுகைகள் நடத்தப்படவில்லை என்பதுடன் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே தொழுகைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததால் வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக்கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதே வேளை பள்ளிவாயல்களில் தக்பீர் சொல்லப்பட்டதுடன் ஊரடங்குச்சட்டத்தை மதித்து நடக்குமாறும் யாரும் வீண் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அடிக்கடி அறிவிப்புச்செய்யப்பட்டுக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிகின்றது.