ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில் செவ்வாய்க்கிழமை(5) மாலை மதுவரி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நான்கு சந்தேக நபர்கள் கைதாகியதுடன் இன்று (6) அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு சந்தேக நபரிடம் இருந்தும் தலா 7 ஆயிரம் வீதம் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சந்தேக நபர்களில் வாச்சிக்குடா, தாண்டியடி ,விநாயகபுரம், பகுதி
இதன் படி அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தலைமையில் அம்பாறை மதுவரி பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா மதுவரி பரிசோதகர் ரி.நளீதரன் உள்ளிட்ட சக உத்தியோகத்தர்கள் இச்சந்தேக நபர்களை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை திருக்கோவில் காஞ்சிரங்குடா ஆலையடிவேம்பு பகுதிகளில் புதன்கிழமை(6) இடம்பெற்ற சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபான செயற்பாட்டில் ஈடுபட்ட நால்வர் கைதானவர்களுக்கு பிணை வழங்கப்பட்டு எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி வரை வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் தமது ஒத்துழைப்புகளை வழங்குமாறு கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் குறிப்பிட்டார்.


Post a Comment
Post a Comment